இரத்ததான முகாம் -2019

எமது விஞ்ஞான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உலகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு கிராம மட்டத்தில் இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 3/3/2019 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாமில் நாவிதன்வெளிப் பிரதேசம் மற்றும் அண்டிய பிரதேசத்திலிருந்து பரவலாக இளைஞர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களென 42 குருதிக் கொடையாளர்கள் குருதிதானம் செய்தனர். நாவிதன்வெளி 15ம் கிராமத்தில் முதன்முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட இவ் இரத்ததான முகாமில் இவ் எண்ணிக்கையிலான குருதிக் கொடையாளர்கள் வருகை தந்திருந்தது எமக்கு வெற்றியே. இவ் இரத்ததான முகாமை ஒழுங்கமைக்க அனுசரனையாளர்களாக கைகோர்த்த வை.தேவசவுந்தரம் அண்ணா அவர்களுக்கும், கு.சசிதரன் அண்ணா அவர்களுக்கும், கு.ஞானரெத்னம் ஐயா அவர்களுக்கும், திருமதி எஸ்.ஜே. அனீஸ் அம்மையார் அவர்களுக்கும், உலக தரிசன நிறுவனத்தினருக்கும், கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கும். பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த உதவிய அமைப்பின் உறுப்பினர்கள், பாடசாலைச் சமுகத்தினருக்கும், பல வகைகளிலும் உதவிய நாவிதன்வெளிப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும், ஆரம்பிப்பு நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்டவர்களுக்கும், குருதிக் கொடையாளர்களுக்கும், வேப்பையடி வைத்தியசாலைச் சமுகத்தினருக்கும், கல்முனை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி ஊழியர்களுக்கும், ஊடக அனுசரணை வழங்கிய NTv ஊடகத்தினருக்கும் ஏனைய இதர உதவிகளைச் செய்துதவியவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெருவித்துக் கொள்கின்றோம்.



















































Comments

Popular posts from this blog

வாணி விழா