இவ் வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான விஞ்ஞான பாட மேலதிக பின்னேர வகுப்புக்கள் நேற்று(13/03/2019) கமு/சது வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
நாவிதன்வெளி 15ம் கிராம விஞ்ஞான மாணவர் ஒன்றியம் 15ம் கிராமம் விளாவடி அறநெறி பாடசாலையுடன் இணைந்து நடாத்திய வாணி விழா இன்று( 20.10.2018) 15ம் கிராமம் விளாவடி அறநெறிப் பாடசாலை மண்டபத்தில் மாலை 4 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது. வாணி விழா பூஜையில் 40க்கும் மேற்பட்ட அறநெறி பாடசாலை மாணவர்கள்,விஞ்ஞான மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள், அறநெறிப் பாடசாலையின் அதிபர், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர். விழாவை சிறப்பாக நடாத்த உதவிய விஞ்ஞான மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள், அறநெறி பாடசாலையின் அதிபர், பிரதேச பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்..
Comments
Post a Comment