க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு
இன்று(27/12/2018) எம்மால் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கொன்று ஒழுங்கு செய்து நடாத்தப்பட்டது. இக் கருத்தரங்கிற்கு குறித்த எண்ணிக்கையிலான மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இக் கருதரங்கிற்கு வளவாளர்களாக கலந்து கொண்ட சட்டத்தரணி சிவரஞ்ஜித் முகாமையாளர் டனிஷ்கரன், சித்த ஆயுள்வேத மருத்துவ பயிற்சியாளர் பிரதீபன், சிந்துஜன், மிதுர்சன் மற்றும் இந்திரா ஆகியோருக்கும் வளவாளர்களை ஒழுங்கமைத்து தந்த கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் ஜீவிதன் ஆகியோருக்கும் கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், ஒழுங்கமைத்து நடாத்திய அமைப்பின் உறுப்பினர்களுக்கும் மற்றும் பல உதவிகளை வழங்கிய கமு/சது/விவேகாநந்தா மகா வித்தியாலய அதிபர் பேரானந்தம் ஐயா அவர்களுக்கும் கமு/சது/வேப்பையடி கலைமகள் வித்தியாலய அதிபர் பாலசிங்கம் ஐயா அவர்களுக்கும் அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
Comments
Post a Comment