Posts

இவ் வருடம் க.பொ.த உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இரசாயனவியல் மற்றும் பௌதீகவியல் பாடங்களுக்கான கடந்தகால வினாத்தாள்கள் மீட்டல் வகுப்புக்கள்

கணித மற்றும் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்று இவ் வருடம் க.பொ.த உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இரசாயனவியல் மற்றும் பௌதீகவியல் பாடங்களுக்கான கடந்தகால வினாத்தாள்கள் மீட்டல் வகுப்புக்கள் ஆரம்பித்திருக்கின்றோம். நாவிதன்வெளி மற்றும் நாவிதன்வெளியை அண்டிய பிரதேச மாணவர்கள் கலந்து கொள்ளவும். இடம்:சது/கமு/வேப்பையடி கலைமகள் வித்தியாலயம். காலம்:திங்கட்கிழமை மாலை 3 மணி-5 மணி.

விஞ்ஞான பாட மேலதிக பின்னேர வகுப்புக்கள் ஆரம்பம்

இவ் வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான விஞ்ஞான பாட மேலதிக பின்னேர வகுப்புக்கள் நேற்று(13/03/2019) கமு/சது வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில்  ஆரம்பிக்கப்பட்ட து .

இரத்ததான முகாம் -2019

Image
எமது விஞ்ஞான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உலகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு கிராம மட்டத்தில் இரத்ததானம்  பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 3/3/2019  அன்று  ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாமில் நாவிதன்வெளிப் பிரதேசம் மற்றும் அண்டிய பிரதேசத்திலிருந்து பரவலாக இளைஞர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களென 42 குருதிக் கொடையாளர்கள் குருதிதானம் செய்தனர். நாவிதன்வெளி  15ம் கிராமத்தில் முதன்முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட இவ் இரத்ததான முகாமில் இவ் எண்ணிக்கையிலான குருதிக் கொடையாளர்கள் வருகை தந்திருந்தது எமக்கு வெற்றியே. இவ் இரத்ததான முகாமை ஒழுங்கமைக்க அனுசரனையாளர்களாக கைகோர்த்த வை.தேவசவுந்தரம் அண்ணா அவர்களுக்கும், கு.சசிதரன் அண்ணா அவர்களுக்கும், கு.ஞானரெத்னம் ஐயா அவர்களுக்கும், திருமதி எஸ்.ஜே. அனீஸ் அம்மையார் அவர்களுக்கும், உலக தரிசன நிறுவனத்தினருக்கும், கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கும். பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த உதவிய அமைப்...