க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கணித பாட செயலமர்வு
க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கணித பாட செயலமர்வு
இன்று (07.10.2018) எமது விஞ்ஞான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கமு/சது/ வேப்பையடி கலைமகள் வித்தியாலத்தில் கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களின் அனுசரணையுடன் இலவச கணித பாட செயலமர்வு ஒன்று காலை 7.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. இச் செயலமர்வில் கமு/சது/வேப்பையடி கலைமகள் வித்தியாலம், கமு/சது/ நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயம் மற்றும் மட்/பட்/ தம்பலவத்தை விக்னேஷ்வரா வித்தியாலயத்தைச் சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் கலந்து கொண்டனர். செயலமர்வு பரீட்சை முறையில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு மாணவர்களுக்கு இலகுவான முறையில் மாணவர்களுடன் இணைந்து கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் 19 பேரால் கற்பிக்கப்பட்டது. இச் செயலமர்வை நடாத்த இட வசதி மற்றும் பல உதவிகள் செய்த கமு/சது வேப்பையடி கலைமகள் வித்தியாலய அதிபர் பாலசிங்கன் ஐயா அவர்களுக்கும், வளவாளர்களாக கலந்து கொண்ட கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கும், செயலமவிர்வுக்கு நிதியுதவி வழங்கிய supramaniyam Kopu Supramaniyam அவர்களுக்கும், செயலமர்வினை ஒழுங்கு செய்து தந்த அமைப்பின் பொருளாளர் செல்வன் ந.லோகிதன் அவர்களுக்கும், மதிய உணவு வழங்கிய அமைப்பின் உறுப்பினர்களுக்கும், செயலமர்விற்கு மாணவர்களை அனுப்பி வைத்த பாடாலைகளின் அதிபர்களுக்கும், அனைத்து வகையிலும் பல்வேறுபட்ட உதவிகள் புரிந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கும், கலந்து கொண்ட மாணவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Comments
Post a Comment