கணித விஞ்ஞான வினாடிப் வினாப் போட்டி

கணித விஞ்ஞான வினாடிப் வினாப் போட்டி
நாவிதன் வெளி 15ம் கிராம விஞ்ஞான மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 10.9.2018 அன்று சது/விவேகானந்தா மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் கணித விஞ்ஞான வினாடிப் வினாப் போட்டியொன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந் நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திரு ரங்கநாதன் ஐயா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் இப் போட்டியில் கமு/சது/ வேப்பையடி கலைமகள் வித்தியாலயம், கமு/சது/ விவேகானந்தா மகா வித்தியாலயம், கமு/சது/ றாணமடு இந்து மகா வித்தியாலயம், கமு/சது/ விவேகானந்தா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த  தரம் 10 மற்றும் தரம் 11 ஐச் சேர்ந்த  மாணவர் குழுக்கள்  பங்கு பற்றியதுடன் குலுக்கல் முறையில் பாடசாலைகளிடையே நடைபெற்ற  போட்டியில் தரம் 10 மற்றும் தரம் 11 ல் கமு/சது/ நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் கமு/சது/ றாணமடு இந்து மகா வித்தியாலய மாணவர்கள் இறுதிப் போட்டியில் மோதியதுடன் கமு/சது/ நாவிதன்வெளி அன்னமலை வித்தியாலய மாணவர்கள் அணி தரம் 10 மற்றும் தரம் 11ல் 1ம் இடத்தைப் பெற்றதுடன் கமு/சது/ றாணமடு இந்து மகா வித்தியாலய மாணவர்கள் அணி 2ம் இடத்தினையும் பெற்றுக் கொண்டனர். 1ம் மற்றும் 2ம் இடத்தினைப் பெற்ற அணிகளின் அனைத்து மாணவர்களும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இப் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர் திரு ரங்கநாதன் ஐயா அவர்களுக்கும்,  இப் போட்டியை நடாத்த நிதியுதவி செய்த சு.கோபு அவர்களுக்கும், ஒன்றுகூடல் மண்டபம் மற்றும் பல உதவிகளை வழங்கிய கமு/சது/ விவேகானந்தா மகா வித்தியாலய அதிபர் பேரானந்தம் ஐயா அவர்களுக்கும், போட்டியை நடாத்த அனுமதி வழங்கிய கோட்டக்கல்விப் பணிப்பாளர் மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர் அவர்களுக்கும், போட்டிக்கு மாணவர்களை அனுப்பி வைத்த பாடசாலைகளின் அதிபர்களுக்கும், வளவாளர்களாக கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கும், போட்டியை ஏற்பாடு செய்தது முதல் இறுதி வரை எம்மோடு கரம் கோர்த்து உதவிய அமைப்பின் உறுப்பினர்கள் அனைவருக்கும் மற்றும் உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகளைக் கேட்டுக் கொள்கின்றோம்.


Comments

Popular posts from this blog

இவ் வருடம் க.பொ.த உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இரசாயனவியல் மற்றும் பௌதீகவியல் பாடங்களுக்கான கடந்தகால வினாத்தாள்கள் மீட்டல் வகுப்புக்கள்

வாணி விழா